புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா குன்றான்டாரார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரம்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ஆதனக்கோட்டையிலிருந்து கருப்புடையான்பட்டி வழியாக பெரம்பூர் வீரமாகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் சுமார் 7 கிலோ மீட்டர் தார்சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பக்தர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.