தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2023-10-29 11:46 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சி பகுதியில் புதிய சாலைகள் போடபட்டபோதிலும் சாலைகளின் இரு புறமும் முறையான வடிகால்கள் இல்லாததால் மழைநீர் சாலையோர பள்ளங்களில் தேங்கி நிற்கிறது. இந்த தண்ணீர் சாக்கடையாக மாறி தூர்நாற்றம் வீசுவதோடு, கொசு உற்பத்திக்கும் காரணமாகிறது. முன்பெல்லாம் மழை பெய்தால் சாலைகளில் தேங்கும் தண்ணீரை பேரூராட்சி மூலம் தற்காலிகமாக வடிகால் ஏற்படுத்தி அகற்றுவது வழக்கம். சமீபகாலமாக இந்த பணி நடைபெறுவது இல்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்