குன்னூரில் இருந்து காட்டேரி சந்திப்புக்கு செல்லும் வழியில் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் வலது புறம் பெரிய பள்ளம் உள்ளது. சாலையோரத்தில் உள்ள இந்த பள்ளத்தில் அந்த வழியாக வரும் வாகனங்கள் நிலைதடுமாறி விழுந்து உயிரிழப்புகளை ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சப்படுகிறார்கள். எனவே அந்த பள்ளத்தை மூட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.