சேலம் மாவட்டம் ஓமலூர்-தர்மபுரி செல்லும் வழியில் தொப்பூர் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து பாலத்து முனியப்பன் கோவில் செல்லும் வழியில் காமராஜபுரம் அருகே 2 வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளன. இந்த ரோடு வளைவு பகுதியாகவும் இறக்கமாகவும் உள்ளதால் இந்த பகுதியில் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இந்த பகுதியில் மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.