கிருஷ்ணகிரி மாவட்டம் காரப்பட்டு கிராமத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த கிராமத்தை சுற்றியுள்ள ஊர்களில் இருந்து தினமும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மக்கள் சென்று வருகிறார்கள். இந்த வழியே செல்லும் சாலை சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.