விழுப்புரம் அடுத்த கோலியனூர் கூட்டுரோட்டில் இருந்து புதுச்சேரி செல்லும் சாலை பலத்த சேதமடைந்து பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.