குண்டும்,குழியுமான சாலை

Update: 2022-11-20 10:13 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தேரழந்தூரில் சிவன் வடக்கு வீதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள கம்பன் மேல்நிலைப்பள்ளி செல்லும் சாலை சேதமடைந்து குண்டும்-குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும், சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடப்பதுடன் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், இந்த சாலையின் வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மேலும், சில மாணவ-மாணவிகள் இந்த வழியாக செல்லும் போது பள்ளங்கள் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்