தார்சாலை வேண்டும்

Update: 2022-08-11 13:10 GMT
நாகை மாவட்டம் வாய்மேடு பகுதியில் உள்ள வாய்க்கால் கரை பகுதியில் சாலை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் மண்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் மண்பாதை சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. மேலும், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் சேற்றில் சிக்கிக்கொள்கின்றன. அதுமட்டுமின்றி பொதுமக்கள் சேற்றில் நடந்து செல்லும் சூழல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்