திருக்கோவிலூர் அருகே தேவரடியார் குப்பத்திலிருந்து அத்தியந்தல் வரை சாலை பலத்த சேதம் அடைந்து போக்குவரத்துக்கு லாய்க்கற்ற நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அங்கு புதிதாக சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.