புதுக்கோட்டை மாவட்டம், காரைக்குடி- அறந்தாங்கி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது வம்பராம்பட்டி கிராமம். இங்கு மதுபானக்கடை, பாம்பாறு மேம்பாலம், குடியாண்டவர் கோவில் ஆர்ச் ஆகியவை உள்ளன. இப்பகுதியில் போக்குவரத்து அதிக அளவில் காணப்படும் நிலையில், இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அதிவேகமாக செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.