சின்னசேலம் நகரில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மூலம் புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டது. ஆனால் சாலையின் இருபுறமும் மண் கொட்டி சமப்படுத்தாமல் உள்ளதால், பள்ளமாக காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையின் இருபுறமும் மண்கொட்டி சாலை உயரத்திற்கு சமப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.