கல்வராயன்மலை பகுதியில் கொட்டபுத்தூர்-வெள்ளிமலை செல்லும் சாலை பலத்த சேதமடைந்து பல்லாங்குழி போல் காணப்படுகிறது. மேலும் சாலை பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால், பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் அதில் சிக்கி விபத்தை சந்திக்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.