வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும்

Update: 2023-08-09 18:15 GMT
திருக்கோவிலூர் பகுதி சாலையில் அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான வேகத்தடைகளில் வெள்ளை நிற வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் அதில் ஏறி, இறங்குவதால், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் உள்ள அனைத்து வேகத்தடைகளிலும் வெள்ளை நிற வர்ணம் பூச வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்