மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் மாதுரைவேலூர்கிராமம் உள்ளது. இக்கிராமத்துக்கு கொள்ளிடம் ஆற்றின் வலதுபுறகரையோரம் செல்லும் சாலை பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக உள்ளது. இதன்காரணமாக இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்குவதால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.