கோத்தகிரி டானிங்டன் பகுதியில் இருந்து கேர்பெட்டா செல்லும் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதன் காரணமாக அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக இரவில் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள குழிகளில் சிக்கி தவறி விழுந்து காயம் அடைந்து செல்கின்றனர். மேலும் மழை பெய்துவிட்டால், அந்த சாலையில் விபத்துகள் இன்னும் அதிகரித்து விடுகிறது. எனவே சாலையை உடடினயாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.