சேலம் மாவட்டம் தாரமங்கலம் சன்னதி தெருவில் இரு சக்கர வாகனங்கள் மிக அதிகவேகத்தில் செல்கின்றன. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி பொதுமக்கள் விபத்தில் சிக்கி காயம் ஏற்படுகின்றன. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி அந்த பகுதியில் அவசியம் வேகத்தடைகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.