புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டத்தில் மூட்டம்பட்டி பஞ்சயதிற்கு உட்பட்ட அரணிப்பட்டி கிராமத்தில் உள்ள கல்லு கொல்லை மற்றும் ஆதிதிராவிடர் குடியிருப்புக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து குண்டும், குழியுமாகவும், மண் சாலையாகவும் மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.