புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா, முள்ளங்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மறவன்பட்டியில் இருந்து கருப்பக்கோன்தெரு வழியாக கோட்டைக்காடுக்கு செல்லும் சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. பலமுறை அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பத்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.