கோத்தகிரியில் உள்ள கார்சிலி பகுதியில் இருந்து செல்வபுரம் பகுதிக்கு செங்குத்தான தார்சாலை செல்கிறது. இந்த சாலை முழுவதும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பாதசாரிகள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. சில நேரங்களில் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கி விடுகின்றன. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையின் முன்வர வேண்டும்.