புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சி கண்டியன் தெருவில் 150-கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 45 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் குண்டும், குழியுமான மண் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் இந்த சாலையில் செல்லமுடியாமல் தடுக்கி விழும் அவல நிலை உள்ளது. மேலும் மழை பெய்தால் இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் அப்பகுதி மக்கள் வீட்டில் முடங்கி கிடக்க வேண்டி உள்ளது. எனவே இந்த சாலையை சிமெண்டு சாலையாக மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.