சின்னசேலம் தாலுகா தொட்டியம் ஊராட்சியில் புதிதாக கழிவுநீர் கால்வாயுடன் கூடிய சாலை அமைக்கும் பணி கடந்த ஆண்டில் தொடங்கப்பட்டது. ஆனால் இப்பணிகள் முழுவதும் முடிக்கப்படாமல், கிடப்பில் போடப்பட்டு்ள்ளது. இதனால் அப்பகுதி வாகன ஓட்டிகள், பாதசாரிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலை பணிகளை தொடங்கி, விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.