புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, வடகாடு அருகேயுள்ள மேலாத்தூர் அருகே நெடுஞ்சாலை பகுதியில் சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இப்பள்ளம் நெடுஞ்சாலையின் வளைவு பகுதியில் இருப்பதால், வேகமாக வரும் வாகனங்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி அசம்பாவிதங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே பெரிய அளவிலான விபத்துகள் நடக்கும் முன்பு இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.