சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-05-14 12:29 GMT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, ராஜகிரி ஊராட்சி,பொதியக்கோண்பட்டி பகுதியில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை மேடும் பள்ளமுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த சாலையில் வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்