கோத்தகிரி கிளை நூலகத்தில் இருந்து ராயன் தெரு செல்லும் தார்ச்சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் சிரமத்துடன் நடந்து சென்று வருகின்றனர். மேலும் சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பழுதடைந்த சாலையை புதுப்பிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.