புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, வடகாடு பரமநகர் பகுதியில் இருந்து கடைவீதி செல்லும் தார் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்த நிலையில் காணப்படுகின்றன. இதனால் இவ்வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள், காய்கறிகள் கொண்டு செல்லும் விவசாயிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என அனைவரும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.