கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் இருந்து ரைபிள் ரேஞ்ச் செல்லும் சாலையில் சில இடங்கள் குண்டும், குழியுமாக உள்ளது. இதன் காரணமாக அந்த சாலை வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் சிரமத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளும் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே பழுதடைந்த அந்த சாலையை சீரமைக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்