குண்டும், குழியுமான சாலை

Update: 2023-04-16 08:54 GMT

கோத்தகிரி கார்சிலி பகுதியில் இருந்து செல்வபுரம் செல்லும் சாலை பழுதடைந்து குட்டை போல ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இதில் நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றன. சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்பு, அந்த சாலையை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்