தரமற்ற முறையில் போடப்பட்ட சாலை

Update: 2023-04-09 16:13 GMT
திருக்கோவிலூா் என்.ஜி.ஜி.ஓ. நகர் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு புதிதாக சிமெண்டு சாலை போடப்பட்டது. ஆனால் சாலை தரமற்ற முறையி்ல் போடப்பட்டுள்ளதால் ஆங்காங்கே ஜல்லிகள் பெயர்ந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் மாறிவிட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே தரமான சாலை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்