தியாகதுருகம் புறவழிச்சாலை இருவழிச்சாலையாக உள்ளது. இந்த சாலையில் புக்குளம் மேம்பாலத்தின் சாலையோரம் பெரிய அளவில் பள்ளம் உள்ளது. இந்த பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி விபத்தை சந்திக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக சாலையோர பள்ளத்தை மண்கொட்டி சமன்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.