கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் அருகே நுகர்பொருள் வாணிப கிடங்கு வழியாக ஏராளமான குடியிருப்புகளுக்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே அந்த சாலையை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.