கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து தாசில்தார் அலுவலகம் மற்றும் கோர்ட்டுக்கு செல்லும் சாலையில் ஒரு சில இடங்களில் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே பழுதடைந்த சாலையை புதுப்பிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.