புதுக்கோட்டை ஒன்றியம், ஆதனக்கோட்டை அருகே உள்ள தொண்டைமான்ஊரணி ஊராட்சிக்கு உட்பட்ட இந்திராநகரில் இருந்து ராஜாபகதூர் வரை உள்ள ஒரு கிலோ மீட்டர் தார் சாலை மிகவும் மோசமான நிலையில் சிதிலமடைந்து கப்பிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.