கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து டான்போஸ்கோ செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் தடுப்புச்சுவர் கட்டும் பணி, கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நடைபெற்று வருவதால், அங்குள்ள சாலை பழுதடைந்து உள்ளது. இதனால் சாலையில் நடந்து செல்லவோ, வாகனங்கள் செல்லவோ சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.