கள்ளக்குறிச்சி அருகே உள்ள ரோடுமாமந்தூர்-மோகூர் வரை உள்ள தார் சாலை பலத்த சேதமடைந்து ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாாிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.