குண்டும், குழியுமான சாலை

Update: 2023-02-05 12:26 GMT
புதுக்கோட்டை ஒன்றியம் ஆதனக்கோட்டை அருகே வண்ணாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சீப்புக்காரன்பட்டி கிராமத்தில் இருந்து கணபதிபுரம் விளக்கு வரை உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் அந்த சாலையும் மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் வாகனங்கள் விலகி கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து காயம் அடைந்தும் வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்