புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பஸ் நிலையத்திலிருந்து செல்லும் காந்திஜி சாலையில் வங்கிகள், சார்பதிவாளர் அலுவலகம், கால்நடை மருந்தகம், பேரூராட்சி அலுவலகம், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், பூ கமிஷன் கடைகள், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த சாலையின் வழியாக தினசரி சுமார் 500 மாணவிகள் சைக்கிள்களிலும், நடந்தும் பள்ளிக்கு சென்று வருகின்றனர். தற்போது இந்த சாலையில் கடைகளின் ஆக்கிரிமிப்பு, வாகனங்கள், பதாகைகள் வைத்து முழுமையாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் உள்பட பலர் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.