கள்ளக்குறிச்சி-கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி-கச்சிராயப்பாளையம் செல்லும் சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் ஆஸ்பத்திரிக்கு வரும் பொதுமக்கள், நோயாளிகள் அச்சப்படுகின்றனர். எனவே அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.