பாதியில் நிற்கும் தார்சாலை

Update: 2022-12-04 11:51 GMT
புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே உள்ள கணபதிபுரம் கிராமத்திலிருந்து ஆதனக்கோட்டை தொண்டைமான்ஊரணி விளக்கு சாலை வரை உள்ள இரண்டரை கிலோ மீட்டர் பழுதடைந்த தார் சாலை புதிய தார்சாலையாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. அப்போது தொண்டைமான்ஊரணி விளக்கு சாலை வரை புதிய தார்சாலை போடாமல் 50 அடி தூரம் இடைவெளி விட்டு போட்டுள்ளனர். விடுபட்ட 50 அடி தூர பழுதடைந்த தார்சாலையினை புதிய தார்சாலையாக அமைத்து சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்