திருக்கோவிலூர் அடுத்த திம்மாச்சூரில் உள்ள சாலை சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் சேற்றில் வழுக்கி கிழே விழுந்து காயம் அடைந்து வரும் அவல நிலை உள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே திம்மாச்சூரில் புதிதாக சாலை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.