ரவுண்டானா அமைக்கப்படுமா?

Update: 2022-11-06 12:07 GMT

மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் பகுதியில் 4 சாலை சந்திப்பு உள்ளது. இந்த பகுதியின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கும். இந்த பகுதியில் ரவுண்டானா இல்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆங்கூர் 4 சாலை சந்திப்பில் ரவுண்டானா அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்