தியாகதுருகம் அருகே குடியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட சோமநாதபுரம் கிராமத்தில் இருந்து உடையனாச்சி வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள தார்சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சாலை பள்ளத்தில் வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கிழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.