தியாகதுருகத்தில் இருந்து புக்குளம் காலனி வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரமுள்ள சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு கரடு முரடாக காணப்படும் அந்த சாலையால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடையும் சம்பவமும் அடிக்கடி நிகழ்கிறது. எனவே வாகன ஓட்டிகள் நலன்கருதி, புதிதாக சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.