கள்ளக்குறிச்சியில் துருகம் மெயின் ரோடு, சேலம் மெயின் ரோடு ஆகிய சாலைகளும் முக்கிய பிரதான சாலையாக விளங்குகிறது. இந்த சாலைகளின் இருபுறமும் 3 மீட்டர் அகலத்திற்கு தார் சாலைகள் அமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் லேசான மழை பெய்தாலே சாலையின் இருபுறமும் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைகிறார்கள். பிரதான சாலையின் பரிதாப நிலையை சரிசெய்ய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.