திருக்கோவிலூர் ஒன்றியம் அரும்பாக்கம் ஊராட்சியில் உள்ள சாலையில், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதனால் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்று கிடக்கிறது. எனவே கழிவுநீர் செல்ல முறையாக வடிகால் அமைப்பதுடன், சேதமடைந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?.