கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் ரங்கநாதபுரம் சுகாதார நிலையத்துக்கு செல்லும் சாலை பலத்த சேதம் அடைந்து காணப்படுகிறது. சாலை பள்ளத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?