உயிர் பலி வாங்க காத்திருக்கும் பள்ளம்

Update: 2022-09-03 14:33 GMT

கச்சிராயப்பாளையத்தில் இருந்து செல்லம்பட்டு செல்லும் சாலையில் மாத்தூர் அருகே ஓடையின் குறுக்கே சிறுபாலம் கட்டுவதற்காக சாலையின் ஒரு பகுதியில் நீண்ட நாள்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் மேற்கொண்டு அங்கு பணிகள் நடைபெறவில்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அந்த பள்ளத்தில் தவறி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உயிர்பலி வாங்கும் முன் சிறுபாலம் கட்டும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்