கள்ளக்குறிச்சி 1-வது வார்டு பத்மாவதி நகரில் ஏமப்பேர் ஏரிக்கு செல்லும் வழியில் உள்ள மின்மாற்றிக்கு அருகே அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், அப்பகுதி மக்களுக்கு சுகாதர சீர்கேடு ஏற்பட்டு பல்வேறு விதமான தொற்றுநோய்கள் பரவும் அபாயம் மட்டுமின்றி, குப்பைகளை தீவைத்து எரிப்பதால் வாகனஓட்டிகளுக்கு மூச்சுத்திணறலும் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.