சென்னை அடையாறு, ருக்மணி நகரில் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் குடியிருப்புகளை மறு கட்டமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. கட்டிடங்களை இடித்து அகற்றுவதால் அருகில் வசிக்கும் வீடுகளுக்கு பாதிப்பு வருமோ என பொதுமக்கள் அச்சத்துடனே உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆமைவேகத்தில் நடைபெறும்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.