பயன்படாத கழிவறை

Update: 2026-10-11 10:41 GMT

சென்னை கொரட்டூர் பஸ் ஸ்டாபில் இருந்து தினமும் அதிகமான பயணிகள் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வார்கள். இந்த பஸ் ஸ்டாப் அருகே இலவச கழிவறை ஒன்று உள்ளது. ஆனால் அது தற்போது வரை பயன்படமால் மூடப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பயணிகள் எதிர்பார்கின்றனர்.

மேலும் செய்திகள்