இப்ப விழுமோ? எப்ப விழுமோ?

Update: 2026-06-21 17:44 GMT
விக்கிரவாண்டி அடுத்த சங்கீதமங்கலம் கிராமத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை கட்டிடத்தின் ஒருபகுதி சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் முற்றிலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அங்கு வரும் பொதுமக்கள் ஒருவித பயத்துடனேயே வந்து செல்லும் அவல நிலை தொடர்கிறது. உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படும் முன் இப்ப விழுமோ? எப்ப விழுமோ? என்ற நிலையில் இருக்கும் கட்டிடத்தை முற்றிலும் இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்